சென்னை மாநாகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவும் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உண்வு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு எடுத்துச்செலும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை தான்.. சென்னையை தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள்.. ஊரெல்லாம் உறங்கிய பின்னர், ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் நீங்கள் தான்.. உங்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்களை பார்த்து நான் மட்டும் இல்லை இந்த சென்னை மாநகரமே நன்றியுடன் வணங்குகிறது.
இந்த மாநகரத்தை தூய்மையாக பாதுகாக்க வேண்டிய உங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை.. உங்கள் சுயமரியாதையை காத்து உங்கள் பசியை போக்க தான் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படும்.. நமது நலனுக்காக உழைக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்ற் அடிப்படையில் தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை.. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் திராவிட மாடல் அரசு செய்யும்.. இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு தனியாக ஓய்வறைகள் இல்லை.. பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், 300 சதுர பரப்பளவில் உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதிகளுடன் ஓய்வெடுக்கும் அறைகள் கட்டப்பட்டு அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இன்று தொடங்கபப்ட்டுள்ள முதலமைச்சரின் உணவு திட்டம் வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மட்டும் நகராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்படும். உங்களின் மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.. வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு தமிழ்நாடு தான் க்ளீன் சிட்டி என்று சொல்லும் நிலை வர வேண்டும்… பொதுமக்களும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.. தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமும் சுயமரியாதையும் காக்கப்பட வேண்டும்.. தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும்.. தன்னலம் கருதாது உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றுவோம்..” என்று தெரிவித்தார்..



