2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
பீகார் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு ரோகிணி ஆச்சார்யா மீது குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் இருந்தபோது, பிரச்சாரத்திற்கு ரோகிணி ஆச்சார்யா அழைக்கப்பட்டார். மேலும் தனது சகோதரர் தேஜஸ்வி போட்டியிட்ட ரகோபூரில் மட்டுமே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்போது, அரசியலை விட்டு வெளியேறவும், தனது குடும்பத்தை விட்டு விலகவும் அவர் எடுத்த முடிவு யாதவ் குடும்பத்தில் உள்ள பகைமையை எடுத்துக்காட்டுகிறது.
முன்னதாக, தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், லாலு யாதவ் தனது மூத்த மகனுடனான அனைத்து குடும்ப உறவுகளையும் கூட அவரது ‘பொறுப்பற்ற நடத்தை’ என்று கூறி நீக்கினார்.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த தேஜ் பிரதாப், பின்னர் ஜனசக்தி ஜனதா தளம் (ஜேஜேடி) என்ற கட்சியை உருவாக்கி, மஹுவா சட்டமன்றத் தொகுதி உட்பட 22 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார். இருப்பினும், பீகார் தேர்தலில் ஜேஜேடி ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை.. அவை நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் (என்டிஏ) கைப்பற்றப்பட்டன.
2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஆர்ஜேடி, சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது.. வெறும் 25 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது.. இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூன்று இடங்களை வென்றன. மொத்தத்தில், இந்தியா கூட்டணி 34 இடங்களை மட்டுமே வென்றது.
மறுபுறம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை வென்றது, பாரதிய ஜனதா கட்சி (BJP) 89 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) 85 இடங்களிலும் வெற்றி பெற்றது.. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) முறையே 19, ஐந்து மற்றும் நான்கு இடங்களை வென்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரின் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (JSP) ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : பீகாரில் களை எடுக்க தொடங்கிய பாஜக; முன்னாள் அமைச்சர் ஆர்.கே.சிங் சஸ்பெண்ட்!



