ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பின் இந்தியா தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!.

keerthi suresh

ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பின் இந்தியாவுக்கான துாதராக, பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


, ஐ.நா.,வின் குழந்தைகள் நல நிதியம், உலகின், 190 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவில், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஏற்கனவே துாதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வரிசையில், யுனிசெப் இந்தியா அமைப்பின் துாதராக, தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ”குழந்தைகள் தான் நம் மிகப்பெரிய பொறுப்பு; எதிர்கால நம்பிக்கை. யுனிசெப் துாதராக இணைவதில் பெருமிதம் கொள்கிறேன்.”ஆரோக்கியமாக வளரவும், கற்றுக் கொள்ளவும், கனவு காணவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுண்டு. இதை நனவாக்கவே, யுனிசெப் உழைத்து வருகிறது. இந்தப் பணியில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

Readmore: கொழுந்தனுடன் கள்ளக்காதல்..!! இடையூறு செய்த கணவனை கொடூரமாக கொன்று ஆற்றில் வீசிய மனைவி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

KOKILA

Next Post

தமிழகமே..! வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...!

Mon Nov 17 , 2025
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் […]
cyclone rain 2025

You May Like