ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். அதில் ஓராண்டில் நாட்டில் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்துப் பல்வேறு கணிப்புகள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார்.
கணிப்பின் படி, இந்த ஆண்டு எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் அமையும் என்றும் ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி கட்சிக்குச் சரிவை ஏற்படுத்தும் என்றும் பஞ்சாங்கத்தில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாங்க கணிப்பில் கூறியதாவது, உலக நாடுகள் குறிப்பாக வல்லரசு நாடுகள் வியக்கும் வகையில் இந்திய பொருளாதாரம், பாதுகாப்பு துறையில் வளர்ச்சி அடையும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் ஏற்படும். ஆளும் கட்சியில் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரிவை சந்திப்பார்கள். சாலை விபத்து அதிகரிக்கும். மீண்டும் பெரும் தொற்று நோய் பரவி மக்கள் பாதிப்படுவார்கள். எல்லை ஓரத்தில் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு நடக்கும்.
கார்கள் உற்பத்தி அதிகரித்து விலை குறையும். புயல் உருவாகி கனமழை பெய்து நீர்நிலைகள் பெருகும். விவசாயத்தில் மஞ்சள், பால், வெங்காயம், தக்காளி, பூண்டு உற்பத்தி அதிகரிக்கும் விலை குறையும். ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, உள்ளிட்ட சில வட மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும். ஈரான், இஸ்ரேல் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read more: டேபிள் ஃபேன் vs சீலிங் ஃபேன்.. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க எது சிறந்தது..?



