உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா பகுதியில், திருமண வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால் தூண்டப்பட்ட ஆத்திரத்தில், 35 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி (35) என்ற பாதிக்கப்பட்ட பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியில் வேன் டிரைவராக பணியாற்றும் மோனு (32) என்பவருடன் பிரீத்திக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. மோனுவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாளடைவில், பிரீத்தி தனது கள்ளக்காதலனான மோனுவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த தொடங்கினார்.
மோனு இதை ஏற்க மறுத்த நிலையில், பிரீத்தி இந்த தொடர்பை மோனுவின் மனைவி மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பதிலடியாக, மோனுவும் பிரீத்தியின் மகள்கள் குறித்துத் தவறான வதந்திகளைப் பரப்புவதாக எதிர் மிரட்டல் விடுத்தார். பிரீத்தியின் இந்தத் தொடர் வற்புறுத்தலால் மனமுடைந்த மோனு, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில், வெளியே செல்லலாம் என்று கூறி பிரீத்தியை மோனு தனது வேனில் அழைத்துச் சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருவரும் உணவு உண்ட பிறகு, பிரீத்தி மீண்டும் திருமணத்தை பற்றி பேச தொடங்கவே, ஆத்திரமடைந்த மோனு, வேனில் மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்துப் பிரீத்தியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
கொலை செய்த பின், மோனு கொடூரமாக பிரீத்தியின் உடலைத் தலை, கைகள் என தனித்தனித் துண்டுகளாக வெட்டினார். உடல் பாகங்களைப் பாலித்தீன் கவர்களில் அடைத்து, அருகில் இருந்த கால்வாயில் வீசிவிட்டு தப்பியோடினார். பின்னர், கால்வாயருகே ரத்தமும் மனித உடல் பாகங்களும் சிந்தியிருப்பதை கண்டு பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களை கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். சிசிடிவி காட்சிகளை கொண்டு மோனுவின் வேனை அடையாளம் கண்ட போலீசார், உடனடியாக அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : கல்லூரி மாணவியை நாயுடன் உடலுறவு செய்ய வைத்த கொடூரம்..!! வீடியோவை காட்டி அடுத்து நடந்த பயங்கரம்..!!



