முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.. கட்சியில் இணைந்து ஓராண்டிலேயே, அதாவது 2021-ம் ஆண்டு அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுளுக்கும் மேலாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்..
கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி ஆதரவு தர உள்ளதாகவும் கூறப்பட்டது.. இதனிடையே டெல்லி சென்ற அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி தலைமையிடம் வழங்கினார்.. தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கப்போவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்..
அதன்படி புதிய இயக்கத்தை தொடங்கப்போவதாக அண்ணாமலை இன்று அறிவித்துள்ளார்.. சமூக வலைதளங்களில் நேரலையில் பேசிய அவர் “ தமிழ்நாட்டில் அடுத்த நடைபெற உள்ள பொது தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்.. எனவே அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.. நமது இயக்கத்திற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.. புதிய தொண்டர்களை தயார்படுத்த கொஞ்சம் காலம் ஆகும்..
தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்த போது முதலில் நல்லக்கண்ணு ஐயாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.. எல்லா நிறுவன மேலிடத்திலும் தமிழன் இருக்கின்றன.. அவர்கள் எல்லோரும் நமது இயக்கத்தில் பங்களிக்க வேண்டும் என்பதே என் ஆசை.. வளர்ந்த பாரதம் இருக்கும் போது முதன்மை மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்த வேண்டும்..” என்று கூறினார்..
மேலும் “ நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் என்பதே என் ஆசை..” என்றும் கூறியிருந்தார்..
இந்த நிலையில் அண்ணாமலையின் புதிய இயக்கமான www.wetheleader.org என்ற இணயதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.. நேரலையில் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்த போதே பலரும் இணைந்து வருகின்றனர்.. அதன்படி அண்ணாமலையின் புதிய இயக்கமான We the Leader இயக்கத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.. இன்னும் பலர் தொடர்ந்து அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து வருவதால் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது..
Read More : இது அதிக பிரசங்கித்தனம்..! பிரவீன் சக்ரவர்த்தி போட்ட பதிவால் கடுப்பான சிபிஎம்..!



