சவுதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 42 இந்திய யாத்ரீகர்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது
சவுதி அரேபியாவின் மதீனா அருகே நேற்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த யாத்ரீகர்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்த பேருந்து மதினாவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஆசிஃப் கூறுகையில், “எனது மைத்துனி, மைத்துனர், அவரது மகன், மூன்று மகள்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் 8 நாட்களுக்கு முன்பு உம்ராவுக்குச் சென்றிருந்தனர். உம்ரா முடிந்து அவர்கள் மதீனாவுக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். பின்னர் இரவு சுமார் 1:30 மணியளவில் இந்த விபத்து நடந்தது,இந்த விபத்துக்கு முன்பு தனது உறவினர்களிடம் பேசியதாக ஆசிஃப் கூறினார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். இது எங்களுக்கு மறக்க முடியாத சோகம் என்று கூறியுள்ளார்.”
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
Readmore: தனது இசை நிகழ்ச்சியில் இந்தியக் கொடியை அசைத்த பாகிஸ்தானிய ராப் பாடகர் தல்ஹா அஞ்சும் ..! யார் இவர்?



