தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்..
இந்த நிலையில் இன்று கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.. அப்போது கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்..
மேற்கு மண்டலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் மேற்கு மண்டலத்தை திமுக கைப்பற்றுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..
கடந்த 2024 மக்களவை தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.. ஆனாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை.. 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது.. இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..



