BREAKING| காதலிக்க மறுத்த +2 மாணவி கத்தியால் குத்தி படுகொலை.. தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்..!

Crime 2025 2

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார்.

மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்த முனிராஜையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் சேராங்கோட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Read more: புற்றுநோயை கட்டுப்படுத்தும் டேன்டேலியன்!. கல்லீரல், சிறுநீர் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு!. நன்மைகள் இதோ!

English Summary

Class 12 student stabbed to death in Rameswaram for refusing to fall in love

Next Post

தூள்..! வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.18,000 ஆக உயர்வு...! தமிழக அரசு அரசாணை..!

Wed Nov 19 , 2025
வாக்குச்சாவடி  நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை […]
Tn Govt 2025

You May Like