fbpx

“செத்துட்டான்னு தெரியாது எங்களுக்கு..” அழுகிய சடலத்துடன் வாழ்ந்த தாய் சகோதரன்.! பகீர் உண்மை.!

ஹைதராபாத் நகரில் இறந்த பெண்ணின் சடலத்துடன் தாயும் சகோதரனும் 5 நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள குடியிருப்பின் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டமில்லாமல் இருந்ததோடு அழுகிய வாடையும் அடித்ததால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது வீட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணுடன் அவரது தாயும் சகோதரரும் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் இறந்த பெண் நோயின் காரணமாக 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்தப் பெண்ணின் தாயும் சகோதரரும் அந்தப் பெண் இறந்ததாக தங்களுக்கு தெரியவில்லை எனக் கூறியிருக்கின்றனர். இறந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரருக்கு மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

புதிதாக ஆதார் கார்டு பெறுவோரின் கவனத்திற்கு..!! வந்தது புதிய மாற்றம்..!! இனி இதுதான் ரூல்ஸ்..!!

Thu Dec 21 , 2023
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதல் முறையாக ஆதார் கார்டு பெறுவோருக்கு பாஸ்போர்ட்டுக்கு இணையான நடைமுறையை இந்திய தனித்துவ அடையாள அதிகார அமைப்பு (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதல் முறையாக ஆதார் பெற விரும்புவோருக்கு இனி, மாநில அரசின் கண்காணிப்பு அலுவலர் நேரடி சரிபார்ப்பு செய்து ஒப்புதல் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 வயதுக்குப் பிறகு […]

You May Like