வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும்.வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள் வரும் 22.112025 (சனிக்கிழமை) மற்றும் 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும்.
இந்த உதவி மையங்களில் வாக்காளர்கள் அவர்களுக்கு மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களுடன் வந்து இம்மையத்தில் சமர்பிக்க வேண்டும். இம்மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), தன்னார்வளர்கள் பணியில் இருப்பார்கள் அவர்கள் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொள்வார்கள்.
மேலும் வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் உதவிசெய்ய உதவி மையங்களில் செயல்படுவார்கள். கணக்கெடுப்பு படிவம் மீண்டும் அளிக்காத வாக்காளர் பெயர் வரைவு பட்டியலில் இடம் பெறாது. எனவே, வாக்காளர்கள் இம்மையங்களை பயண்படுத்திக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் அளித்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



