பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை.. ரூ. 1,20,940 சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

bank job 1

பேங்க் ஆப் இந்தியா வங்கி 115 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைமை மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர், சட்ட அதிகாரி ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.


பணியிட விவரம்:

தலைமை மேனேஜர் – 15

சீனியர் மேனேஜர் – 54

சட்ட அதிகாரி – 2

மேனேஜர் – 44

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்களின் குறைந்தபட்ச வயது என்பது 28 முதல் அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். மேனேஜர் பதவிக்கு 25 முதல் 32/ 35 வயது வரை இருக்கலாம். சட்ட அதிகாரி பதவிக்கு 32 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

தலைமை மேனேஜர்: பொறியியல், தொழில்நுட்பம், இளங்கலை அறிவியல், முதுகலை பொறியியல், முதுகலை அறிவியல் அல்லது ஏதேனும் முதுகலைப் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்.

சீனியர் மேனேஜர்: பொறியியலில் இளங்கலை / முதுகலை / M.Sc / பிற முதுகலைப் பட்டப்படிப்புகள் பெற்றவர்கள் தகுதி. அதிகபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

சட்ட அதிகாரி: சட்டத்தில் (Law) இளங்கலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர்: பொறியியல் இளங்கலை / முதுகலை, MCA, முதுகலை பட்டப்படிப்பு, MBA, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2–3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சம்பளம்:

  • தலைமை மேனேஜர் பதவிக்கு ரூ.1,02,300 முதல் 1,20,940 வரை சம்பளம்
  • சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வரை சம்பளம்
  • மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,969வரை சம்பளம்

தேர்வு செய்யப்படும் முறை: காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முறை ஆன்லைன் தேர்வு + நேர்காணல் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து செயல்முறையின் விவரங்கள் மேலும் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வு – 125 மதிப்பெண்கள்

  • மொத்தம் 125 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
  • ஆங்கிலம் – 25 கேள்விகள் (Qualifying only – இறுதி மதிப்பெண்களில் சேர்க்கப்படாது)
  • பதவிக்கான முதன்மை பாடம் – 100 கேள்விகள்
  • தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
  • Negative Marking அமலும் செய்யப்படும்.

நேர்காணல் – 100 மதிப்பெண்கள்

  • ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? பேங்க் ஆஃப் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2025.

Read more: Flash : குட்நியூஸ்! தொடர் சரிவில் தங்கம் விலை..! எவ்வளவுன்னு செக் பண்ணுங்க..!

English Summary

Bank of India has issued a recruitment notification for 115 vacancies.

Next Post

13,700 அடி உயரம்! உலகின் உயரமான நியோமா விமானத் தளத்தை திறந்து வைத்த இந்தியா; சீனாவின் திட்டங்களை இது எப்படி மாற்றும்?

Fri Nov 21 , 2025
இந்திய விமானப்படை கிழக்கு லடாகில் நியோமா (Nyoma) விமானத்தளத்தை திறந்து வைத்துள்ளது. 13,700 அடி உயரத்தில், இது உலகில் இயங்கும் உயரமான போர்விமானத் தளம் ஆகும். இந்தத் தளம் இந்தியாவின் உயர்ந்த இடங்களில் விமான சக்தியை பெரிதாக மேம்படுத்தும், மேலும் எல்லை கட்டுப்பாட்டு வரம்பு (LAC) அருகே விரைவான நடவடிக்கைக்கு உதவும். நியோமா விமானத்தளத்தின் முக்கிய விவரங்கள் ஏர் சீப் மார்ஷல் A.P. சிங் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் […]
nyoma airbase in ladakh 1

You May Like