இந்தியாவில் அடையாளச் சரிபார்ப்பு முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையmaana UIDAI (Unique Identification Authority of India) விரைவில் ஆதாரை ஆஃப்லைனில் பயன்படுத்தும் முறையை ஒரே மாதிரியாக்கத் திட்டமிட்டு வருகிறது. இது, அடையாளத்தை சரிபார்ப்பதில் ஒரு பெரும் மாற்றமாக கருதப்படுகிறது.
எங்கு பயன்படுத்தப்படும்?
இந்த புதிய முறை அமலுக்கு வந்த பின், ஹோட்டல்கள், குடியிருப்பு / கேட்டட் கம்யூனிட்டிகள், உணவகங்கள், தேர்வுக் கூடங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் ஆதாரை ஸ்கேன் செய்ய வேண்டி இருக்கலாம்..
புதிய முறை எப்படி வேலை செய்யும்?
சரிபார்ப்பு இரண்டு முக்கிய அம்சங்கள் மூலம் நடைபெறும்:
QR கோடு ஆதாரம்
ஆதார் கார்டில் உள்ள QR கோடு ஸ்கேன் செய்து விவரங்களை பெறுவார்கள்.
“Presence Proof” (முகம் சரிபார்ப்பு)
அங்குள்ள சாதனம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, அது ஆதார் தகவலுடன் பொருந்துகிறதா என்பதை பார்க்கும். முக்கியமாக, இதற்கு இணைய இணைப்பு தேவையில்லை – UIDAI சர்வருடன் லைவ் கனெக்ஷன் இல்லாமலேயே சரிபார்ப்பு முடியும்.
இது தற்போது பயன்பாட்டில் உள்ள முகம் சரிபார்ப்பு முறையிலிருந்து எப்படி வேறுபடுகிறது.?
வங்கிகள் போன்றவை பயன்படுத்தும் “face authentication” முறை பொதுவாக UIDAI சர்வருடன் இணைந்து வேலை செய்கிறது. ஆனால் இந்த புதிய ஆஃப்லைன் முறையில், UIDAI சர்வருடன் நேரடி இணைப்பு தேவையில்லை. ஒருமுறை பதிவிறக்கப்பட்ட பாதுகாப்பு விசைகள் மூலம் உள்ளுரிலேயே சரிபார்ப்பு நடைபெறும். இதனால், சரிபார்ப்பு வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என அரசு கருதுகிறது.
இதனிடையே UIDAI விரைவில் ஒரு புதிய ஆதார் ஆப்–ஐ அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயலியின் முக்கிய நோக்கம், பயனர்கள் ஆதாரை ஆஃப்லைனில் சரிபார்க்க முடியும்படி ஒரு பாதுகாப்பான வசதியை வழங்குவது. இந்த செயலி தற்போது முன்-வெளியீட்டு (pre-launch testing) நிலையில் சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய செயலி வழங்கும் அம்சங்கள்:
1. QR கோடு அடிப்படையிலான ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு
நேரடி இணைய இணைப்பு இல்லாமல், QR கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் அடையாளச் சரிபார்ப்பு செய்ய முடியும்.
2. டிஜிட்டல் ஆதாரை எடுத்துச் செல்லும் வசதி
பயனர்கள் தங்களின் ஆதார் தகவலை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் (physical card தேவையில்லை).
3. தனியுரிமை பாதுகாப்பு (Privacy safeguards)
பயனர்கள் தங்களது ஆதார் விவரங்களில்: தேவையற்ற தகவல்களை மறைக்க, குறிப்பிட்ட புலங்களை மட்டும் காட்ட முடியும். இது தனியுரிமையை அதிகரிக்கிறது.
செயலி எப்போது வெளியாகும்?
UIDAI இதுவரை சரியான வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை.
ஆனால் தற்போது இந்த ஆப் “final testing phase” எனப்படும் இறுதி சோதனை கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆதாரை ஆஃப்லைனில் யார் சரிபார்க்கலாம்?
UIDAI வெளியிட்ட வரைவு விதிகளின்படி, சட்டப்படி பதிவு செய்யப்பட்ட எந்த நிறுவனம் வேண்டுமானாலும் “Offline Verification Seeking Entity” (OVSE) எனப்படும் ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு அலகாக விண்ணப்பிக்கலாம். QR கோடு மற்றும் ஆப்-அடிப்படையிலான சரிபார்ப்பு முறைமைகளை தங்கள் அமைப்பில் இணைக்க வேண்டும். பதிவு செய்ய ஒரு சிறிய (nominal) கட்டணம் செலுத்த வேண்டும்.
UIDAI பல அன்றாட உதாரணங்களை கூறியுள்ளது, இவற்றில் விரைவில் ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு தேவைப்படலாம்:
ஹோட்டல்களில் செக்-இன் செய்வது, கேட்டட் கம்யூனிட்டிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு நுழைவு, ஸ்டேடியம், நிகழ்ச்சிகள் போன்ற டிக்கெட் அடிப்படையிலான நுழைவு, தேர்வுகளுக்கு மாணவர்களின் அடையாளம் சரிபார்ப்பு, மருத்துவமனையில் அனுமதி பெறும் போது, டெலிவரி பணியாளர், வீட்டு உதவியாளர் அடையாளச் சரிபார்ப்பு
UIDAI, “வயது சரிபார்ப்பு” (age verification – கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்க) போன்ற பயன்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது “DigiYatra போல” செயல்படும் பயணச் சரிபார்ப்பு முறையிலும் உதவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு எப்போது தொடங்கும்?
இந்த புதிய ஆஃப்லைன் சரிபார்ப்பு முறை சந்தை தேவைக்கு ஏற்ப கட்டங்களாக (phases) அறிமுகப்படுத்தப்படும் என்றூ தெரிவிக்கப்பட்டுளது பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.
தனியுரிமை vs வசதி – இதற்குப் பாதகங்கள் உள்ளனவா?
ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு தனியுரிமையை மேம்படுத்தும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.. ஏனெனில் பயனர்கள் தங்களின் ஆதார் கார்டின் பௌத்திக நகலை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அது தவறான கைகளில் போகும் அபாயத்தையும் குறைக்கும்.
ஆனால் மற்றொரு புறம், ஆதாரை இவ்வளவு பல அன்றாட செயல்களில் கேட்டுக் கொள்வது தனியுரிமை மீறலாக இருக்கலாம் என்ற கவலைகள் எழுகின்றன.
மிகுதியான கட்டுப்பாடு ஏற்பட்டு, “ID policing” (அடையாளத்தின் அடிப்படையில் தினசரி கண்காணிப்பு) போன்ற சூழல் உருவாகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தரவு எப்போது, எவ்வாறு பகிரப்படுகிறது அல்லது சேமிக்கப்படுகிறது என்ற விதிகள் முழுமையாக தெளிவாக இல்லை. “Proof of Presence” முக சரிபார்ப்பு நடைமுறையில் எப்படி செயல்படுகிறது? பயனர் தனது தரவை நிர்வகிக்கும் அதிகாரம் உண்மையில் அவர்களுக்கே உள்ளதா? தரவு எங்கு, எப்போது பகிரப்படுகிறது? என்பதுதான் முக்கிய கேள்விகளாக உள்ளது..
UIDAI 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் சந்திப்பு மற்றும் விளக்கக் கூட்டங்கள் நடத்தியுள்ளது. புதிய செயலியின் அம்சங்களை விரிவாகப் பகிர்ந்துள்ளது.. வரும் மாதங்களில், ஆஃப்லைன் ஆதார் சரிபார்ப்பு இந்தியாவில் மிக விரிவாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



