தாலியோட ஈரம் கூட காயல.. புதுமாப்பிள்ளைக்கு கனவிலும் நடக்க கூடாத சம்பவம்..! என்ன ஆச்சு..?

Marriage 2025 1

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞனுக்கு நவம்பர் 3-ம் தேதி கல்யாணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு மணமக்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்துள்ளனர். திருமணம் ஆகி 18 நாள் ஆன நிலையில் திடீரென மணப்பெண்ணை காணவில்லை.


வீட்டில் தாலி செயின் மட்டும் இருப்பதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கணவன் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் மணப்பெண்ணை தேடியிருக்கிறார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாயமான பெண் தனது கணவனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

அதில், என் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேடாதீங்க, நான் வரமாட்டேன். தாலிகூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்க கூட சந்தோஷமாக வாழ முடியல ‘ப்ளீஸ்’ என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் செய்வதறியாது பரிதவித்து போயிருக்கிறார். திருமணம் ஆன 18 நாளில் புதுமணப்பெண் தாலியை கழட்டி வைத்து விட்டு, வீட்டை விட்டு சென்ற சமபவம் அப்பகுதியில் பேசு பொருளானது. பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி செய்து வைக்கும் திருமணம் ஒரு இளைஞனின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆக்கியுள்ளது.

Read more: தூங்கும் போது இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க.. இது இதயம், மூளைக்கு மிகவும் ஆபத்தானது!

English Summary

Even the moisture of the palm tree is gone.. An incident that should never have happened to a newlywed..! What happened..?

Next Post

ATM-ல் இருந்து பணம் எடுத்த பிறகு Cancel பட்டனை அழுத்தினால் பின் நம்பரை திருட முடியாதா? உண்மை என்ன?

Mon Nov 24 , 2025
இப்போது டிஜிட்டல் யுகம். தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், பரிவர்த்தனைகளுக்கு மக்கள் டிஜிட்டல் சேவைகளையும் தேர்வு செய்கிறார்கள். காய்கறிகள் வாங்குவது முதல் லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் வரை, UPI அல்லது பிற ஆன்லைன் சேவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்னும் நமக்கு பணம் தேவை. எனவே, UPI சகாப்தத்தில் கூட, மக்கள் ATM-களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பணம் எடுத்த பிறகு மக்கள் மீண்டும் மீண்டும் கேன்சல் பட்டனை […]
atm 1

You May Like