“நைட் டைம்ல நீ ஏம்மா ஏர்போர்ட் பின்னாடி தனியா போற..?” –  கோவை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..!

premalatha2

கோவையில் கல்லூரி பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி பெண்கள் ஏன் தனியே செல்ல வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.

அவர் பேசுகையில், “விமான நிலையத்துக்கு பின்னால் ஒரு பெண், தனது ஆண் நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது ஒரு கூட்டமே அங்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குரியாக இருக்கிறது. பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

24 மணி நேரமும் பெற்றோர் நம்மோடு வர முடியாது. 24 மணி நேரமும் காவல்துறை நமக்கு பாதுகாப்பு தர முடியாது. 24 மணி நேரமும் இங்கு இருக்கிற அரசாங்கம் நமக்கு பாதுகாப்பு தராது. நாளைக்கு பாதித்தால் நம் வாழ்க்கை தான் பாதிக்கும். நானும் ஒரு பெண், எனக்கு அந்த உரிமை இருக்கிறது அதனால் நான் சொல்கிறேன். யாரை நம்பியும் லேட் நைட்டில் தனியாக யாரையும் எங்கேயும் சந்திக்காதீங்க. ஏர்போர்ட் பின்னாடி ஏன்மா நீ போற? அதுவும் நைட்டில் எதுக்கு போகணும்? ஏன் சந்திக்கணும்? உங்களை நீங்கள் பாதுகாக்கணும்.

ஒரு பெண் தனியாக பயமில்லாமல் எப்போது இரவில் செல்கிறாளோ அன்னைக்கு தான் இந்த நாடு சுதந்திரம் பெற்றதா வரலாறு என்று சொல்லிட்டு தான் இருக்கோம். ஆனாலும் பல்வேறு இடங்களில் இன்னும் குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லி கொடுத்து வளங்க. அதையும் மீறி ஒரு இடைஞ்சல் வந்தால், போலீசில் புகார் கொடுங்கள் என் பேசினார்.

Read more: புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்..! மத்திய அரசு சுமுக தீர்வு காண வேண்டும்…! பாமக நிறுவனர் கோரிக்கை…!

English Summary

“Why are you walking alone after the airport at night..?” – Premalatha Vijayakanth’s speech on the Coimbatore incident..!

Next Post

ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள்...! ட்ராய் அதிரடி நடவடிக்கை...!

Tue Nov 25 , 2025
ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு லட்சம் நிறுவனங்கள் மீது ட்ராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ட்ராய் டிஎன்டி செயலி வாயிலான போலியான தொலைபேசி அழைப்புகள் / குறுங்செய்திகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பயன்பாட்டைத் தடை செய்வதன் மூலம் போலியான அழைப்புக்களை தடுத்து நிறுத்தாது […]
college 5g mobile 2025

You May Like