அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த நிகழ்விற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,000 முதல் 7,000 விருந்தினர்களை கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஜனவரியில் கர்ப்பக்கிரகத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, முக்கோணக் கொடியை ஏற்றியது ராமர் கோயிலின் முறையான நிறைவைக் குறிக்கும்.
இந்த நிலையில் ராமர் கோயில் கொடியேற்ற விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அயோத்தி சென்றார்.. பிரதமர் மோடி அயோத்தியில் ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார்.. மேலும் அயோத்தி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி அயோத்தி உள்ள சன்னதிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் தரிசனம் செய்தார்.. வசிஷ்டர், விஸ்வாமித்திரம், அகத்தியர், வால்மீகி, தேவி, அஹில்யா, நிஷாத்ராஜ், அன்னை சபரி ஆகிய 7 சன்னதிகளில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.. மேலும் அயோத்தி கோயிலில் உள்ள ராம் தர்பார், குழந்தை ராமர் சன்னதிகளிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்..
இதை தொடர்ந்து ராமர் கோயில் உச்சியில் பிரதமர் மோடி இன்று கொடியேற்றினார்.. 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட முக்கோண வடிவ காவி நிற கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.. கொடி வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்ட சிகரம் மீது ஏற்றப்பட்டுள்ளது.. கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை சித்தரிக்கும் வகையில் சூரியன் படம், ஓம் எழுத்தும் இடம்பெற்றுள்ளது.. காசி கணேஷ்வர் சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் அயோத்தி, காசி மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த 108 ஆச்சார்யர்களால் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது..
பிரதமர் வருகைக்கு முன்னதாக, அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎஸ் கமாண்டோக்கள், என்எஸ்ஜி ஸ்னைப்பர்கள், சைபர் குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட மொத்தம் 6970 பாதுகாப்புப் பணியாளர்கள் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். கொடியேற்ற விழாவிற்கு முன்னதாக ராமரின் ‘தரிசனத்திற்காக’ நேற்று முதலே பல பக்தர்கள் ராம ஜென்மபூமி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்..
Read More : பெண்களுக்கு ரூ.11,000..! மோடி அரசின் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!



