Flash : “அண்ணனின் அரசியல் அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும்..” செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ..!

TVK Vijay sengottaiyan

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடீர் ட்விஸ்டாக செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 3 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, நேற்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்..


இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து பேசினார்.. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது.. இதன் மூலம் செங்கோட்டையன் தவெகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.

அதன்படி இன்று செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார்.. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன், அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சுமார் 100 தவெகவில் இணைந்தனர்.. தவெகவில் இணைந்த உடனேயே கட்சிப் பொறுப்பை விஜய் செங்கோட்டையனுக்கு வழங்கினார்..

அதன்படி, செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..

இந்த நிலையில் செங்கோட்டையனை வரவேற்று பேசி விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் பேசிய அவர் “ 20 வயதிலேயே எம்.ஜி.ஆர்-ஐ நம்பி மன்றத்தில் சேர்ந்தவர்.. சிறு வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பொறுப்பை ஏற்றவர் அதிமுகவின் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.. 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை உடன் செங்கோட்டையன் அவர்களையும் அவர்களுடன் இணைந்து நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.. நல்லது நடக்கும்.. நல்லது மட்டுமே நடக்கும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்துள்ளார்..

Read More : விஜய் தலைமையை ஏற்ற செங்கோட்டையன்; இபிஎஸ்-ன் ரியாக்‌ஷன் என்ன? ஒரே வரியில் சொன்ன பதில்..!

RUPA

Next Post

தங்கம் விலை இனி குறையாது.. 2026-ல் ரூ.1.5 லட்சத்தை தாண்டும்.. அமெரிக்க வங்கி கணிப்பு..!

Thu Nov 27 , 2025
Gold price will not decrease anymore.. Will cross Rs.1.5 lakh in 2026.. American Bank predicts..!
us startup gold 11zon

You May Like