Breaking : செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கிய பொறுப்புகள்.. விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

vijay tvk sengottaiyan 1

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அக்கட்சி தலைவர் விஜய் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்: தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்: அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்: மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள். இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை. மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. வெங்கடாசலம். திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ஜெயலலிதா ஆட்சி புனிதமான ஆட்சி இல்லையா? சட்டையில் இன்னும் ஜெ.படம் ஏன்? செங்கோட்டையன் விளக்கம்.

RUPA

Next Post

காத்திருக்கும் பேரழிவு.. இந்த நாளில் உலகம் அழியும்? பாகிஸ்தானின் நாஸ்ட்ராடாமஸ் திகிலூட்டும் கணிப்பு!

Thu Nov 27 , 2025
பல்கேரியாவின் பாபா வாஙாவின் கணிப்புகளைப் போலவே, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹியின் ஒரு புதிய கணிப்பு உலகம் முழுவதும் கவலை கிளப்பியுள்ளது. ஒரு மிகப் பயங்கரமான விண்கல் பூமியை விரைவில் தாக்கப் போகிறது என்று அவர் கணித்துள்ளார்.. அது மனிதகுலத்தையும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முழுமையாக அழிக்கக்கூடிய பெரிய பேரழிவு உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் விண்கல் மோதல் நிகழும் நாள் […]
pakistan riaz ahmed gohar shahi india daily 583745052 2 1

You May Like