“நான் கருப்பு கலர் கோட் சூட் போட இதுதான் காரணம்..” விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்.!

cm vijay new

நீங்கள் அமைத்துக் கொடுத்துள்ள இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.. யார் எந்த நிலைமைக்கு போனாலும் இந்த கிண்டலும், கேலியுமாக பேசுவது இருக்க தானே செய்யும்.. நம்மை பற்றி, நமது அரசியல் பற்றி, நமது பேச்சு பற்றி கிண்டல், கேலியாக பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.. தயவு செய்து இதை நிறுத்திவிடாதீர்கள்.. தயவு செய்து தொடர்ந்து கிண்டல் செய்யுங்கள்.. நீங்கள் தான் எனது எனர்ஜி ஃபோர்ஸ்.. நீங்கள் பேசிக்கிட்டே இருங்க. நான் மக்களுக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன்..


நான் கோட் சூட் போடுவது குறித்தும் பலர் கிண்டல் செய்கின்றனர். ஏன் நாமெல்லாம் கோட் சூட் போடக் கூடாதா..? அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்க சக்திகள் தான் போட வேண்டுமா என்ன? அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது.. நான் என்ன கலர் கலராகவா கோட் சூட் போட்டு வருகிறேன்.. ரெண்டே கலர் தான். ஒன்று கருப்பு, நமது எல்லோரின் மனசு மாதிரியே பிளாக் அண்ட் ஒயிட்.. எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட் ஆக இந்த விஜய் இருப்பான் என்பதை காட்ட தான் இந்த கலர்.. எல்லாவற்றிக்கும் இப்படி விளக்கம் சொல்லி பேசும் டைப் நாம் கிடையாது.. உன்னை பற்றி பேசுபவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று மக்களே சொல்லிவிட்டார்கள்..

அரசியல் ரீதியாக ரெண்டே ரெண்டு பேருக்கு இடையே தான் போட்டியே.. ஒன்னு தவெக, இன்னொன்று திமுக.. இதற்கு நடுவில் வேறு யாருக்கும் எந்த வேலையும் கிடையாது.. தேர்தலுக்கு முன்னாடியும் அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை.. தேர்தலுக்கு பின் சுத்தமாக இல்லை..

உங்களுக்காக உண்மையா உழைக்க வந்த இந்த விஜய்யா..? இந்த விஜய் ஆட்சி அமைக்க கூடாது என்று நினைத்த ஸ்டாலின் சாரா..? இதற்கு நடுவில் வேறு யாராவது உள்ளே வந்து நம்மை தடுக்க ஏதாவது செய்தால் நிர்வாகம் அதற்கு பொறுப்பு இல்லை. திமுக நம்மை தடுக்க தடுக்க, நம்மை எதிர்க்க எதிர்க்க அத்தனையும் நமக்கு நன்மை தான்..” என்று தெரிவித்தார்..

Read More : “எல்லாத்தையும் நீங்க செய்துவிட்டு என் மீது பழி போடுறீங்க..” சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வர் விஜய் காட்டம்..!

RUPA

Next Post

சுப கிரகங்களின் சேர்க்கை..! இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் உறுதி..!

Mon Jun 1 , 2026
The rare conjunction of the planets Mercury, Jupiter, and Venus in the sign of Gemini will open the doors of fortune for certain zodiac signs.
horoscope yogam

You May Like