திருவாரூர், மயிலாடுதுறையை தொடர்ந்து.. புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் அரை நாள் விடுமுறை.!!

rain school holiday

டிட்வா புயல் மற்றும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முழுவதுமே மழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களும் அம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

Read more: நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்த இளம்பெண்.. காதலன் வெறிச்செயல்..!! தஞ்சையை உலுக்கிய பகீர் சம்பவம்..

English Summary

Following Tiruvarur and Mayiladuthurai.. Pudukkottai district schools and colleges have also been declared half-day holiday..!!

Next Post

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

Fri Nov 28 , 2025
டாக்டர் ஜெ. ஜெயலலிதா பெயரில் இயங்கி வரும் தமிழ்நாடு இசை  மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க ஸ்டாலின், நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான டாக்டர் பட்டத்தை வழங்கினார்.. அதே போல் ஓவியர் சந்துருவுக்கும் இன்று டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. மேலும் 1846 மாணவர்களுக்கு […]
actor sivakumar doctor

You May Like