அலர்ட்.. டிட்வா புயல் தற்போது எங்குள்ளது? எவ்வளவு வேகத்தில் நகர்கிறது..? வானிலை மையம் அப்டேட்!

Cyclone 2025

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கி.மீ-ஆக குறைந்தது..


இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயலின் வேகம் மேலும் குறைந்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது..

சென்னைக்கு 510 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 410 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் இலங்கை மட்டகளப்பிறகு வடமேற்கே 120 கி.மீ தொலைவிலும் இந்த புயல் நிலை கொண்டுள்ளது..

இந்த புயல் வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ல் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே வங்கக்கடலை அடையும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமதாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வரும் 30-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : டிட்வா புயல்: இலங்கையில் 56 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்..! நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா!

RUPA

Next Post

“500 கோடி சம்பளத்தை தூக்கி எறிந்தவர்.. 2026-ல் விஜய் முதல்வராவார்..” அடித்து சொல்லும் செங்கோட்டையன்..!

Fri Nov 28 , 2025
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் […]
tvk vijay sengottaiyan 1

You May Like