தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம்.. புதிய அமைச்சர்கள் யார் யார்..? வெளியானது லிஸ்ட்..!

cm vijay tn sec

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. திமுக கூட்டணி 75 இடங்களில் வெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.. அதிமுக கூட்டணி 55 கூட்டணி இடங்களிலும் வெற்றி பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது..


ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்..

முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.. தொடர்ந்து நேற்று முன் தினம் 9 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பதவியேற்றுக் கொண்டனர்..

தேர்தல் நேரத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார்.. அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள், ஒரு மாநிலங்களவை சீட்-ம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது..

இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி தமிழக அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 அமைச்சரவை இடங்களில் கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் 1967-ம் ஆண்டுக்கு பின்னர் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு தமிழக அமைச்சரவையில் 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.. திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன..

17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அந்த வகையில், ஆளுங்கட்சியான தவெகவுக்கு 26 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பின்னர் துறைகளும் ஒதுக்கப்படும்..

இதனிடையே தவெக சார்பில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. அதன்படி திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. சத்யபாமா, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ மரிய வில்சன், சேலம் தெற்கு எம்.எல்.ஏ விஜய் தமிழன் பார்த்திபன், தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன், குமாரபாளையம் எம்.எல்.ஏ விஜயலட்சுமி, அறந்தாங்கி எம்.எல்.ஏ முகமது பர்வேஸ், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா, கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உள்ளிட்டோரும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இதையடுத்து புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.. தொடர்ந்து புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும்.. ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்துடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.. நிறைவு நாளில் முதல்வர் ஜோசப் விஜ பதிலுரை ஆற்றுவார்.. அதன்பின்னர் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்..

Read More : மக்களே கவலை வேண்டாம்..! LPG, பெட்ரோல், டீசல் குறித்து மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..!

English Summary

Reports have emerged that the Tamil Nadu Cabinet, led by Chief Minister Vijay, is set to be expanded tomorrow.

RUPA

Next Post

பெண் வடிவில் அலங்கரிக்கப்படும் சிவலிங்கம்..! பிருந்தாவனத்தில் இருக்கும் இந்த அதிசய கோவில் பற்றி தெரியுமா..?

Wed May 20 , 2026
A Shivalinga decorated in the form of a woman..! Do you know about this amazing temple in Brindavanam..?
Sivan 2026

You May Like