ஓய்வூதியம் பெறும் நபர்களே கவனம்…! இன்று மாலைக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும்…!

Central govt pensioners

அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, நிர்வாகத்தை மேம்படுத்துதல், சந்தாதாரர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியாவின் பரந்த நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பங்களிப்பது ஆகியவற்றில் ஆணையத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.அக்டோபர் 17, 2025 தேதியிட்ட ஆலோசனை அறிக்கை, தேசிய ஓய்வூதியத் திட்டம்/ அடல் ஓய்வூதியத் திட்டத்தில் நீண்ட காலம் செல்லுபடியாகும் அரசுப் பத்திரங்களுக்கு இரட்டை மதிப்பீட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முன்மொழிகிறது.

தேசிய ஓய்வூதியத் திட்ட பங்கேற்பாளர்கள், வருங்கால சந்தாதாரர்கள், ஓய்வூதிய நிதிகள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் ஆணையம் இந்தத் திட்டம் குறித்து கருத்துக்களைக் கோருகிறது. தங்கள் கருத்துகளையும், உள்ளீடுகளையும் பங்குதாரர்கள் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இந்த 7 அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து..!! உடனே மருத்துவரை பார்த்தால் பின்விளைவுகளை தவிர்க்கலாம்..!!

Sun Nov 30 , 2025
மனிதர்களை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோயில், இரைப்பையில் (Stomach) உள்ள செல்களில் வளரக்கூடிய அசாதாரண கட்டியே வயிற்றுப் புற்றுநோய் ஆகும். வயிற்றின் மேல் இடது பக்கத்தில் உள்ள இரைப்பை, நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கும் முக்கிய உறுப்பு ஆகும். இந்த வகை இரைப்பை புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், அவை தினசரி சந்திக்கும் சாதாரணப் பிரச்சனைகளைப் போலவே இருப்பதால், பலரும் அவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால், புற்றுநோய் பெரும்பாலும் […]
cancer 11zon

You May Like