தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணியிடங்கள் நிரப்பும் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம் மற்றும் சம்பள விவரம்:
* யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பதவிக்கு மாதம் ரூ.40,000 சம்பளமாக வழங்கப்படும்.
* ஆயுஷ் மருத்துவ அதிகாரி (சித்தா) பதவிக்கு 1 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாத சம்பளம் ரூ.34,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவியாளர் பதவியில் 4 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு மாதம் ரூ.10,000 சம்பளமாக வழங்கப்படும்.
* சித்தா மருந்து வழங்குபவர் பதவிக்கு 1 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும்.
* சிகிச்சை உதவியாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.
* ஆடியோலஜிஸ்ட் பதவியில் 2 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு மாதம் ரூ.23,000 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* ஆடியோமெட்ரிக் உதவியாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இதற்கான மாத சம்பளம் ரூ.17,250 ஆகும்.
* பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாதம் ரூ.23,000 சம்பளமாக வழங்கப்படும்.
* டேட்டா மேனேஜர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இப்பதவிக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.
* பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 1 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளமாக வழங்கப்படும்.
* மருத்துவமனை ஊழியர் பதவிக்கு 1 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.13,800 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
- ஆலோசகர் பதவிக்கு BNYS பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி பதவிக்கு BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மருந்து வழங்குபவர் பதவிக்கு பார்மசி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- சிகிச்சை உதவியாளர் பதவிக்கு நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- ஆடியோலஜிஸ்ட் பதவிக்கு அதற்கான இளங்கலை பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பிற்கு பின்னர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- ஆடியோமெட்ரிக் உதவியாளர் பதவிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான பட்டப்படிப்பு மற்றும் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- டேட்டா மேனேஜர் பதவிக்கு அதற்கான முதுகலை பட்டப்படிப்பு உடன் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி/ எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி, அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவமனை பணியாளர் மற்றும் உதவியாளர் பதவிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
தேர்வு செய்யப்படும் முறை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வர்ம் உள்ளவர்கள் https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலச்சங்கம்,
147 – பூலுவபட்டி பிரிவு,
நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641 602.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025
Read more: ஆதாரில் அசத்தல் அப்டேட்.. இனி எங்கும் அலைய வேண்டாம்.. வீட்டிலிருந்தே மொபைல் எண்ணை மாற்றலாம்..!!



