செங்கோட்டையனை தொடர்ந்து விஜய் கட்சியில் இணையும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்..? புது ட்விஸ்ட்..

vijayttvdhinakaranops 1756974736

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான, அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் இந்த மாத தொடக்கத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக கூறியிருந்தார்.. எனினும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.


இதையடுத்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்டாக தவெகவில் இணைந்தார். முன்னதாக  தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டது.

செங்கோட்டையனுடன் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது விஜய்க்கும் மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. எப்படி பிரச்சார மேடை இருக்க வேண்டும் என்று தொடங்கி மக்களிடம் நடத்தும் பேச்சு வார்த்தை வரை விஜயின் வலது கையாக இனி அவர்தான் இருக்கப் போகிறார். இதனிடையே இன்னும் ஓரிரு நாட்களில் விஜயுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. பாஜகவை தங்களின் கொள்கை எதிரியாக விஜய் அறிவித்த நிலையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் என் டி ஏ கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Read more: செங்கோட்டையன் கோட்டையில் களம் இறங்கும் எடப்பாடி.. அதிமுக போடும் மாஸ்டர் பிளான்..!! பரபர அரசியல்..

English Summary

Following Sengottaiyan, OPS, TTV Dinakaran to join Vijay’s party..?

Next Post

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! தாயிடம் கூறியதால் தலையை துண்டித்த கொடூரம்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

Sun Nov 30 , 2025
சேலம் மாவட்டம் தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ஓட்டுநர், வீட்டுக்கு பூப்பறிக்க வந்த பட்டியலிட சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தினேஷ்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுமியின் தலையை துண்டித்து கொலை […]
Rape 2025 7

You May Like