தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மக்கள் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்த கோரிக்கையை ஏற்று ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி மக்கள் பவன் என அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி ‘ராஜ்பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஆளுநர் இல்லம் மக்கள் பவன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read more: மீன ராசிக்கு சனி பெயர்ச்சி.. இந்த 5 ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது..!!



