அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தவெகவில் இணைந்த பின்னர், கோபிசெட்டிப்பாளையம் வந்த செங்கோட்டையனுக்கு ஆதரவாளர்கள் சார்பில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார். இதற்கிடையே, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், தன்னை குறித்த விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கினார்.
செங்கோட்டையன் கூறுகையில், ”கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், சுயநலவாதி என்று எடப்பாடி பழனிசாமி என்னை விமர்சனம் செய்திருப்பதாக சொல்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. பிரான்ச் மட்டுமே மாறியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்ததாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னை பொறுத்தவரையில் தெளிவாக இருக்கிறேன். கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி விழாவை நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். பாருங்கள்” என, கூறி சென்றார்.
Read more: வெள்ளியில் முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்..!! 2026இல் விலை எப்படி இருக்கப் போகுது தெரியுமா..?



