கரூர் சம்பவத்திற்கு பின் முடங்கிய தவெக கட்சி மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கியது.. 41 பேர் உயிரிழப்புக்கு பின் செயல்படாமல் இருந்த அந்த கட்சியின் தலைவர்கள் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதும் வெளியே வரத் தொடங்கினர்.. அக்கட்சி தலைவர் விஜய் மீண்டும் கண்டன அறிக்கைகளை வெளியிட தொடங்கினார்.. மேலும் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் விஜய் உரையாற்றினார்..
இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 5 ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் பகுதி வரை விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 5 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்டது..
தவெக சார்பில் புதுச்சேரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்ட நிலையில், விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.. எனினும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க இருந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் கூட்டணி கட்சியான பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது..
விஜய்யின் ரோட் ஷோ தொடர்பாக புதுவை முதல்வர் நேற்று காவல்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.. இதை தொடர்ந்து புதுவையில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. விஜய் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.. முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தவெகவினர் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் இந்த ரோட் ஷோ ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. விஜய்யின் ரோடு ஷோவுக்கு தற்போது வரை அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானங்களில் பொதுக்கூட்டங்களாக நடத்திக் கொள்ளலாம் எனவும் அதற்கான 3 இடங்களையும் புதுச்சேரி அரசு பரிந்துரை செய்திருந்த்து.. எனினும் தற்போது வரை பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தவெக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கப்படவில்லை.. இன்னும் 2 நாட்களே உள்ளதால் தற்போது விஜய் ரோட் ஷோ ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ நடத்தினால், பிற மாவட்டங்களில் இருந்து கூட்டம் திரளக்கூடும் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.. இதன் அடிப்படையில் கரூர் சம்பவத்தை போன்று புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ நடத்த காவல்துறையினர் மறுத்திருந்தனர்.. அதே போல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக் கோரியும் தவெக தரப்பு மனு அளிக்காத நிலையில் தற்போது விஜய்யின் ரோட் ஷோ ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : காலையிலேயே அதிர்ச்சி.. மின்சாரம் பாய்ந்து இருவர் துடிதுடித்து பலி.. மதுரையில் சோகம்..!



