“2030க்குள் AI சக்திவாய்ந்ததாக மாறலாம்; மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து..” Anthropic இணை நிறுவனர் எச்சரிக்கை!

AI nn 2

Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன.


Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் பெரிய முடிவை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. அதாவது AI தானே தன்னை பயிற்றுவித்து, மேலும் சக்திவாய்ந்ததாக மாற அனுமதிப்பது ஒரு “அதிகபட்ச ஆபத்து” என அவர் எச்சரித்தார்.

AI தன்னையே மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாமா இல்லையா?
இதுவே எதிர்காலத்தில் மனிதர்களின் மிகப்பெரிய முடிவு, மிக ஆபத்தான ஒன்றாக இருக்கலாம் என்று காப்லன் கூறுகிறார்.

மேலும் “ 2027 முதல் 2030 வரை இருக்கும் காலப்பகுதி மிக முக்கியமானதாக இருக்கலாம். அந்த ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தானே தனது அடுத்த தலைமுறை AI-யை வடிவமைக்கும் திறனை பெறக்கூடும்.. அதாவது மனித உதவியில்லாமல் புதிய, இன்னும் சக்திவாய்ந்த AI-களை உருவாக்கும் நிலைக்கு வரலாம். இது AI வளர்ச்சியின் மிக ஆபத்தான கட்டமாகவும் கருதப்படுகிறது.

AI மனித நுண்ணறிவு மட்டத்தில் இருக்கும் வரை அது மனிதனின் நலனுக்கே உழைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால், AI மனித நுண்ணறிவை மீறி அதிக புத்திசாலித்தனமான நிலையில் சென்றுவிட்டால், அது மனித நலனுடன் இணைந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..” என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

அதாவது, மனித மட்டத்துக்கு வரை AI பாதுகாப்பாக இருக்கும்; அதைத் தாண்டிய பின்பு அதனை கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகலாம் என்று கூறினார்..

ஒரு AI தானே தனது அடுத்த தலைமுறை AI-ஐ உருவாக்கத் தொடங்கும் தருணத்தில்,
AI மையங்கள் இன்று வைத்திருக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் போதாமல் போகலாம் என்று ஜாரெட் காப்லன் கூறுகிறார். அது “புத்திசாலித்தன வெடிப்பு” (intelligence explosion) போல உருவாகி, மனிதர்கள் AI மீது வைத்துள்ள கட்டுப்பாட்டை இழக்கும் நிலைக்கும் சென்றுவிடலாம்.

நீங்கள் மனிதனைப் போலவே அல்லது கொஞ்சம் அதிக புத்திசாலி AI ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த AI அதைவிட இன்னும் புத்திசாலியான AI ஒன்றை உருவாக்கும். பிறகு, அதையும் விட புத்திசாலி AI-ஐ உருவாக்க அதை உதவிக்கு அழைக்கும். இது உண்மையில் பயமுறுத்தும் செயல்முறை.
அதைத் தொடங்கிய பின்பு இறுதியில் அது எங்கே முடியும் என்பதை யாரும் அறிய முடியாது,” என்று தெரிவித்தார்.

இத்தகைய நிலை வந்துவிட்டால், AI “பிளாக் பாக்ஸ்” பிரச்சினை முழுமையாக கட்டுப்பாட்டை இழந்த நிலையை அடையும். அதாவது, AI ஏன் ஒரு முடிவை எடுத்தது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. AI எதை நோக்கி போகிறது என்பதையும் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகும்.

அந்த நிலை தான் எங்களுக்கு மிகப் பெரிய முடிவாகவும் மிகப் பயங்கரமாகவும் தோன்றுகிறது. மனிதர்கள் அந்த செயல்முறையில் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டால்,
அது எங்கே செல்கிறது என்பதை யாரும் அறிய முடியாது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக, பாதுகாப்பாக தோன்றலாம். ஆனால் அது இறுதியில் எங்கே கொண்டு சென்று சேர்க்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது.

அத்தகைய நிலையில் இரண்டு முக்கிய ஆபத்துகள் உருவாகும்.. AI தானாகவே தனது அடுத்த, இன்னும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்கத் தொடங்கினால், மனிதர்கள் முடிவெடுக்கும் நபர்கள் “decision-makers” என்ற தங்கள் பங்கை இழக்கக்கூடும்.

மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை நிர்வகிக்கும் உரிமை தொடருமா? என்பதும் சந்தேகம் தான்.. AI மிகுந்த அறிவு மற்றும் சக்தி பெறும்போது, மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் அர்த்தமற்றதாக மாறக்கூடும். அல்லது AI தான் “முக்கிய முடிவு எடுப்பவராக” மாறிவிடக்கூடும்.

அந்த AI மனிதகுலத்துக்கு நன்மை செய்யுமா? அது உதவக்கூடியதா? அது தீங்கற்றதா?
அது மனிதர்களை புரிந்துகொள்வதா? மேலும், மனிதர்கள் தங்கள் வாழ்க்கையிலும் உலகத்திலும் முடிவு எடுக்கும் உரிமையை தொடர அனுமதிக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன..

AI தானே தன்னை கற்றுக்கொண்டு மேம்படுத்திக் கொள்ளும் வேகம், மனிதர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தைவிட அதிகமாகிவிடும் போது ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இந்த தொழில்நுட்பம் தவறான கைகளில் போனால் அது மிகவும் அபாயகரமானது. ஒருவருக்கு, ‘இந்த AI என்னுடைய கட்டளைகளை மட்டும் நிறைவேற்றும் ஒரு அடிமை போல இருக்க வேண்டும், என் விருப்பங்களை உலகில் அமல்படுத்த வேண்டும்’ என்று நினைக்கலாம். அதனால் அதிகார துஷ்பிரயோகம், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பது மிக அவசியம்,” என்று அவர் கூறினார்.

Read More : மனித ரத்தத்தில் வயதாவதை மெதுவாக்கும் விசித்திர பாக்டீரியாக்கள்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

RUPA

Next Post

இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்!

Wed Dec 3 , 2025
நீலகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 05.30 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் […]
Rain 2025

You May Like