தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களுக்கு மத்தியில் நேற்று நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) இருந்து 38 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான குழு பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 70-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவிலிருந்து 42 விமானங்களும், மும்பையிலிருந்து 32 விமானங்களும் அடங்கும். இந்த திடீர் ரத்துக்களும் தாமதங்களும் காரணமாக, இந்தியாவின் பல பெரிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமானக் குழு (crew) உறுப்பினர்கள் கடுமையாக குறைவாக இருந்தது, சில தொழில்நுட்ப கோளாறுகள், விமான நிலைய நெரிசல் மற்ற செயற்பாட்டு (operational) சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் “ இன்றுவரை நள்ளிரவு 12.00 மணி முதல், இன்டிகோவின் 38 விமானங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ரத்து செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளது..
இதனிடையே நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய FDTL (Flight Duty Time Limitations) விதிமுறைகளுக்கு பின் ஏற்பட்ட குழு (crew) பற்றாக்குறையே விமானங்கள் ரத்தானதற்கு காரணம் என்று அதிகாரிகள்குறிப்பிட்டனர்.
FDTL என்றால் என்ன?
FDTL என்பது விமானிகள் மற்றும் கேபின் குழு உறுப்பினர்கள் வேலை செய்யக்கூடிய அதிகபட்ச நேரத்துக்கு விதிக்கப்படும் பாதுகாப்பு வரம்பு. இது பைலட்டுகள் சோர்வு (fatigue) அடையாதவாறு, விமானப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அமல்படுத்தப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தரவின்படி, மெட்ரோ விமான நிலையங்களில் IndiGo-வின் On Time Performance (OTP) 35% ஆகக் குறைந்தது. இந்த பெரும் தடங்கல்களை ஒப்புக்கொண்ட IndiGo, “செயல்பாட்டு சவால்கள்” காரணமாக தாமதங்கள் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. இதில் தொழில்நுட்ப கோளாறுகள், விமான நிலைய நெரிசல், மற்றும் பிற செயல்பாட்டு தேவைகள் உள்ளிட்டவை காரணம் என தெரிவித்தது.
இண்டிகோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த இரண்டு நாட்களாக IndiGo-வின் சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிக்கவும். எங்களால் முன்கூட்டியே கணிக்க முடியாத பல எதிர்பாராத சவால்கள் சிறிய தொழில்நுட்ப கோளாறுகள், குளிர்கால அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, விமானப் போக்குவரத்து நெரிசல், மற்றும் புதுப்பிக்கப்பட்ட விமான குழு நேர வரம்பு (Flight Duty Time Limitations – FDTL) நடைமுறை—எல்லாம் சேர்ந்து எங்கள் செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.” என்று தெரிவித்துள்ளார்..
மேலும் பயணிகள் விமான நிலையத்துக்கு செல்லும் முன் https://www.goindigo.in/check-flightstatus.html என்ற இணைப்பில் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு இண்டிகோ நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
இண்டிகோ எத்தனை விமானங்களை ரத்து செய்தது?
டெல்லி விமான நிலையம்: 38 விமானங்கள் (உள்நாட்டு + சர்வதேச)
ஹைதராபாத் விமான நிலையம்: செவ்வாய்க்கிழமை – 14 விமானங்கள், புதன்கிழமை – 19 விமானங்கள்
பெங்களூரு விமான நிலையம்: 42 விமானங்கள்
மும்பை விமான நிலையம்: 32 விமானங்கள்
ஏர் இந்தியா, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட் போன்ற பிற விமான நிறுவனங்களின் சேவைகளும் தாமதப்பட்டன. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் Amadeus என்ற உலகளாவிய சேவை வழங்குநரின் செக்-இன் அமைப்பு (check-in system) செயலிழந்தது. இதனால் பல விமான நிறுவனங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன.
எனினும் சிறிது நேரத்தில், அந்த அமைப்பு முழுமையாக சரிசெய்யப்பட்டதாகவும், தற்போது அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்குகின்றன என்றும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியது.
Read More : பெண்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! 2026க்குள் சமையல் எண்ணெய் விலை குறையப் போகுது! எவ்வளவு தெரியுமா?



