தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை.. திரையுலகில் அதிர்ச்சி..!

k rajan 1

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தயாரிப்பாளர் கே. ராஜன்: தமிழ் திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட தயாரிப்பாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுபவர் கே. ராஜன். 1983 ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மச்சாரிகள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரக அறிமுகமானார். தயாரிப்பாளராக மட்டுமின்றி சில திரைப்படங்களையும் இயக்கியுள்ள்ளார். திரைப்பட தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையுலக சங்க பணிகளில் ஈடுபட்டு, கோலிவுட் வட்டாரத்தில் தனித்த அடையாளம் பெற்றவர்.

சினிமா தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கியுள்ள இவர், குறிப்பாக குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஆதரித்து தயாரிக்கும் பாணியால் அறியப்படுகிறார். தயாரிப்பு மட்டுமல்லாது, திரைப்பட விநியோகம் மற்றும் திரையரங்கு தொடர்பான விவகாரங்களிலும் இவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். திரையுலக பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார்.

Read more: “புயலுக்கு முந்தைய அமைதி” ஈரானுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஒற்றை பதிவால் அதிரும் உலக நாடுகள்..!

English Summary

Tamil film producer K. Rajan committed suicide by jumping into the river.. what was the reason..?

Next Post

நடராஜருக்கு கடிதம் எழுதி குறைகளை சொல்லும் பக்தர்கள்.. கடலூரில் இப்படி ஒரு அதிசய கோவிலா..?

Mon May 18 , 2026
A miraculous temple where you can write a letter to Lord Nataraja and complain.. Is there a temple like this in Cuddalore..?
nataraja temple

You May Like