அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் விலையைக் குறிப்பிட வேண்டும்…! மத்திய அரசு உத்தரவு…!

masala 2025

அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையைக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட அளவீட்டு (பொட்டலப் பொருள்கள்) இரண்டாவது (திருத்தம்) விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது அதற்குக் குறைவான சிறிய பொட்டலங்களுக்கு முன்பு விலைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், புதிய விதியின்படி அனைத்துச் சிறிய பான் மசாலா பொட்டலங்கள் உட்பட அனைத்துக் கட்டாய அறிவிப்புகளையும் அச்சிட வேண்டும்.இந்த நடவடிக்கை மூலம், அனைத்துப் அளவுள்ள பொட்டலங்களிலும் வெளிப்படையான விலைத் தகவலை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.

மேலும், பான் மசாலாவுக்கு சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்ட ஜிஎஸ்டி வரியைச் சீராக அமல்படுத்தி, வரி வருவாயை முறையாக வசூலிக்கவும் இந்த உத்தரவு உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Vignesh

Next Post

அதிகாலையிலேயே 2 நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்..!! பீதியில் ஓடிய மக்கள்..!! தற்போதைய நிலை என்ன..?

Thu Dec 4 , 2025
இன்று அதிகாலை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர். […]
Drake Passage Earthquake

You May Like