Flash : குட்நியூஸ்.. தொடர் உயர்வுக்கு பின் இன்று தங்கம் விலை சரிவு.. எவ்வளவு தெரியுமா?

gold jewlery

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.320 குறைந்து, ரூ.96,160 செய்யப்படுகிறது

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதன்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.. இந்த வார தொடக்கத்தில் தங்கம் சிறிதளவு குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 40 குறைந்து, ரூ.12,020க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.320 குறைந்து, ரூ.96,160 செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.200க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.2,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

English Summary

In Chennai today, the price of gold jewellery has decreased by Rs. 320 per sovereign, making it Rs. 96,160.

RUPA

Next Post

தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ. 1000 கிடைக்காது.. மகளிர் உரிமைத்தொகை மேஜர் அப்டேட்..!

Thu Dec 4 , 2025
Even though they are eligible, they will not get Rs. 1000.. Women's entitlements major update..!
magalir urimai thogai 2025

You May Like