மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited – BDL) நிறுவனம், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்காக மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
எலெட்க்ரிக்கல் – 32
மெக்கானிக்கல் – 27
எலெக்ட்ரிக்கல் – 6
கணினி அறிவியல் – 4
உலோகவியல் – 1
கெமிக்கல் – 1
சிவில் – 2
நிதி – 5
எச்ஆர் – 2
வயது வரம்பு: விண்ணப்பதார்களின் வயது அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 30 வயது வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 32 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பொறியியல் பிரிவுகளில், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், உலோகவியல் மற்றும் கெமிக்கல் ஆகிய துறைகளில், இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* கெமிக்கல் பிரிவுக்கான பணியிடங்களுக்கு, கெமிக்கல் துறையில் முதுகலை அறிவியல் (M.Sc – Chemistry) பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சிவில் பொறியியல் பிரிவிற்கு, இளங்கலை பட்டப்படிப்பு (BE / B.Tech – Civil) முடித்திருக்க வேண்டும்.
* நிதி (Finance) பிரிவிற்கு விண்ணப்பிக்க, CA, ICAI, MBA (Finance) அல்லது நிதிப் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தகுதி அளிக்கப்பட்டுள்ளது.
* மனிதவளம் (HR) பிரிவில், MBA அல்லது முதுகலை டிப்ளமோ, மனிதவளம், PM & IR, பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூக அறிவியல், சமூக நலன்புரி, சமூகப் பணி ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும், சட்டத் துறையில் படித்தவர்கள் (Law Graduates) இந்த பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். ஆண்டுக்கு 15.55 ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது? மத்திய அரசு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://bdl-india.in/recruitments என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் 29 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.



