சவுதி அரேபியாவின் மதினாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மற்றொரு இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இந்த விமானம் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் வழியில் இருந்தது. ஆனால்,
நடுத்தர வானில் வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததால், அது மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன.
விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டது.. எனினு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் Mumbaiயில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
என்ன நடந்தது?
இன்று காலை, மதினா –ஹைதராபாத் இன்டிகோ விமானத்திற்கு “ஹைதராபாத்தில் விமான தரையிறங்கினால் விமானத்தை குண்டுவைத்து வெடிக்கச் செய்வோம்” என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அந்த விமானத்தில் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். ஹைதராபாத் விமானநிலையம் அச்சுறுத்தல் மெயில் பெற்றதால், விமானத்தை நேரடியாக இறங்க அனுமதிக்கப்படவில்லை.. உடனடியாக அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கச் செய்யப்பட்டது. விமானத்தை தனியான இடத்தில் நிறுத்தி, பாதுகாப்பு அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர்.
இந்தியாவின் பல விமான நிலையங்களில் குழப்பம் நீடிக்கிறது. இண்டிகோ தனது புதிய ரோஸ்டர் (பணியாளர் ஒழுங்கமைப்பு) விதிகளுக்கு ஏற்ப செயல்படுவதால் சிக்கல்களை சந்தித்து வருகிறது.. அதன்படி இன்று வரை 300-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
முக்கிய விமான நிலையங்களில் ரத்தான விமானங்கள்:
டெல்லி – 33
ஹைதராபாத் – 68
மும்பை – 85
பெங்களூரு – 73
புதன்கிழமை நிலவரம்
டெல்லி: 67
பெங்களூரு: 42
ஹைதராபாத்: 40
மும்பை: 33
ரோஸ்டர் விதி மாற்றத்தால் பணியாளர்களின் பணிசுமை மற்றும் ஒழுங்கமைப்பு பிரச்னைகள் ஏற்பட்டதால், பல நகரங்களில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, IndiGo விமான நிறுவனம் தற்போது அதிகாரிகளின் தீவிர கவனத்தில் உள்ளது.



