திமுக அரசை உடனே கலைக்க வேண்டும்..!! சுப்பிரமணியன் சுவாமி போட்ட பரபரப்பு பதிவு..!! நடந்தது என்ன..?

Stalin 2025

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு அமல்படுத்தப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.


கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த முறை, எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று 3 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், தீபத்திருவிழா அன்று, வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள கொப்பரையில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் உடனடியாக போராட்டத்தில் இறங்கினர். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் திரண்ட அவர்கள், தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி கந்த சஷ்டி கவசம் பாடியதால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பதற்றம் நிலவியது.

நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாலையில் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். “தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன். இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சோ, உச்ச நீதிமன்றமோ எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனால், கோவில் நிர்வாகத்தின் இந்த நடைமுறை ஏற்புடையது கிடையாது” என்று நீதிபதி கண்டித்தார்.

மேலும், “வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனடியாக மலை உச்சிக்குச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். அவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எஃப் கமாண்டன்ட் தலைமையிலான படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் உட்பட 67 பேர் திருப்பரங்குன்றத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

போலீஸார் இந்த உத்தரவு நகலை காண்பித்து, எக்காரணம் கொண்டும் 144 தடையை மீறி யாரையும் மலைக்கு அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தனர். இதனால், இந்து அமைப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு, திருப்பரங்குன்றம் மலையே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதால், அந்தப் பகுதியில் உச்சகட்ட பதற்றமான சூழல் நிலவியது.

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தமிழக அரசு மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்று வாதிடும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மறுபுறம், திமுக ஆதரவாளர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பாஜக மற்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக ஊடகப் பதிவில், இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டில், இந்துக் கோயில்கள் திமுக அடியாட்களாலும், மேலும் பிற இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி திமுக அரசை கலைக்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Read More : நடப்பு நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க ஒப்புதல்…!

CHELLA

Next Post

வீட்டிலிருந்தே தொழில் தொடங்கி மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Fri Dec 5 , 2025
இன்றைய பொருளாதார சூழலில், படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பதை விட, சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவு மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கான தேவை சந்தையில் எப்போதும் அதிகம் என்பதால், இத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இலவச பயிற்சி முகாம் விவரம் : திருவள்ளூர் மாவட்டம், கோடுவள்ளியில் அமைந்துள்ள பால் மற்றும் உணவுத் தொழில்நுட்பக் […]
Chennai Secretariat 2025

You May Like