மத்திய அரசின் கீழ் செயல்படும் பிரபல காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Oriental Insurance Company Limited – OICL) நிறுவனத்தில், காலியாக உள்ள நிர்வாக அதிகாரிகள் (Administrative Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்
- நிர்வாக அதிகாரி – 300
- பொதுப்பிரிவு – 285
- இந்தி – 15
கல்வித்தகுதி: நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆங்கிலத்துடன் கூடிய இந்தியில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது இந்தியுடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில பாடத்தைக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 1995 டிசம்பர் 1 தேதிக்குள் முன்னரும், 30.11.2004 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. மத்திய அரசு விதிகளின்படி வயதில் தளர்வு உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மூன்று கட்டத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி முறையில் நடைபெறும். இதில் ஆங்கிலம், நுண்ணறிவு மற்றும் பகுத்தறியும் திறன் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு கொள்குறி முறையில் நடைபெறும். இதற்குடன் 30 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு (விரிவான விடை) நடத்தப்படும். இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறும் நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் போது, தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மூன்று கட்டங்களுக்கு பிறகே இறுதி தேர்வு செய்யப்படும்.
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.50,925 முதல் 96,765 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விருபுவோர் https://orientalinsurance.org.in/careers என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025.
Read more: இந்தியாவில் ரஷ்ய அதிபர்.. புடினுக்கு பகவத் கீதையின் நகலை பரிசளித்த பிரதமர் மோடி..!



