ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாள்.. செங்கோட்டையன் போட்ட ட்வீட்..!! குழப்பத்தில் தவெகவினர்..

jayalalithaa vs sengottaiyan 1

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த நிலையில், த.வெ.க உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த பதிவில் “மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கார்த்திகை தீபத் திருநாள் விழாவையொட்டி, செங்கோட்டையன் வெளியிட்ட வாழ்த்து போஸ்டரில், செங்கோட்டையன் – விஜய் புகைப்படங்களுடன் தவெகவின் 5 கொள்கை தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் தவெகவின் வழிகாட்டு தலைவர்களாக கூறப்பட்ட அண்ணா, எம்.ஜி.ஆர் படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. வழிகாட்டு தலைவர்களுக்கு அருகே ஜெயலலிதாவின் படமும் இருந்தது. எனவே தவெகவின் வழிகாட்டு தலைவர் ஜெயலலிதாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது..

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் படத்தை செங்கோட்டையன் நீக்கியிருந்தார். ஆனால், எந்த மாற்றமும் செய்யாமல் அதை நேற்று மீண்டும் பதிவிட்டார். தவெகவில் இணைந்த போதும் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை செங்கோட்டையன் வைத்திருந்தார்.. அதே போல் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அவரின் அலுவலக பேனரிலும் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றுள்ளது..

தவெகவில் இணைந்ததும் ஜெயலலிதா நினைவிடத்திலும் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். இதன்மூலம் ஜெயலலிதாவை தவெகவின் வழிகாட்டு தலைவராக செங்கோட்டையன் முன்னிறுத்த முயல்கிறாரா? இதற்கு தவெக தலைமை எப்படி எதிர்வினையாற்றப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read more: Breaking : ரெப்போ ரேட் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்..!

English Summary

Jayalalithaa’s 9th death anniversary.. Sengottaiyan’s tweet..!! TVK in confusion..

Next Post

400 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! அதிர்ச்சியில் பயணிகள்..!! எப்போது சீராகும்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Fri Dec 5 , 2025
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் […]
aeroplane flight plane

You May Like