சமீபகாலமாக இணையத்தில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வகை இணைய மோசடி நடந்து வருகிறது.. இது ஒரு சாதாரண கோப்பு அல்லது சந்தேகமான இமெயில் அல்ல — மிகவும் வைரலாகப் பரவும் “19-நிமிட வீடியோ” என்று கூறி அனுப்பப்படும் ஒரு போலி லிங்க் தான்.
இந்த மோசடி சோஷியல் என்ஜினியரிங் முறையை பயன்படுத்துகிறது. அதாவது, “என்ன வீடியோ இது?” என்ற ஆர்வத்தை பயன்படுத்தி அவர்கள் லிங்கை கிளிக் செய்யத் தூண்டுகிறது. இந்த லிங்க் பொதுவாக WhatsApp, Telegram, Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்கள் அல்லது தனிப்பட்ட மெசேஜ் மூலம் வருகிறது. அதை கிளிக் செய்தவுடன், நீங்கள் எதிர்பார்த்த வீடியோவுக்கு செல்ல முடியாது..
அதற்கு பதிலாக, உங்கள் போனில் மால்வேர் (தீங்கிழைக்கும் மென்பொருள்) நிறுவ முயலும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள், பேஸ்புக்/வாங்கிங் லாகின், ஓடிபி போன்றவற்றை திருடும், அல்லது போலியான பக்கம் திறந்து உங்களை மேலும் ஏமாற்றும்.
லிங்கை கிளிக் செய்தவுடன் வீடியோ திறக்காது. அதற்கு பதிலாக, அது உங்கள் மொபைலில் ஒரு சைபர் தாக்குதலை தொடங்கும்.. இந்த தாக்குதலின் இறுதிக்கட்டத்தில், அது உங்கள் மொபைலில் பாங்கிங் ட்ரோஜன் (Banking Trojan) எனப்படும் மிக ஆபத்தான மெல்வேர் ஒன்றை நிறுவும்.
இந்த மோசடி எப்படி நடக்கிறது?
“19-நிமிட சீக்ரெட்/லீக் வீடியோ” என்று ஒரு லிங்க் அனுப்புவார்கள்.
அந்த லிங்கை திறந்தவுடன் வீடியோ திறக்காது; அதற்கு பதிலாக பல பொய் இணைய பக்கங்கள், வஞ்சக விளம்பரங்கள், போலியான ‘Play’ பொத்தான் போன்றவை காட்டப்படும். பயனர் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தவுடன் — Android banking trojan அல்லது infostealer malware உங்கள் மொபைலில் இரகசியமாக நிறுவப்படுகிறது. பின்னர் நீங்கள் உங்கள் வங்கி ஆப் திறந்தவுடன், அது ஒரு போலி login screen காட்டும். அது உண்மையான ஆப்பைப் போலவே இருக்கும்.. நீங்கள் டைப் செய்யும் User ID, Password, PIN, Card number எல்லாம் திருடப்படும். ஓடிபி திருடப்படும், வங்கியிலிருந்து வரும் SMS இவைகளை எல்லாம் வாசித்து திருடிவிடும். இதனால் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை காலி செய்ய முடியும்.
எப்படி பாதுகாப்பாக இருப்பது?
“19-நிமிட வீடியோ” போன்ற clickbait லிங்க்களை திறக்க வேண்டாம்
வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராமில் வரும் அறியாத லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்
Apps வைக்கும்போது unknown sources யை Off செய்து வைத்திருக்கவும்
வங்கி செயலிகளுக்கு, அணுகல், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற அனுமதிகளை கொடுக்கக்கூடாது.
. மொபைலில் ஒரு முறையாக password மாற்றுங்கள்
உங்களுக்கு தெரியாத apps இருப்பதை சரிபார்த்து நீக்கவும்
ஆண்டி வைரஸ் செயலியை வைத்திருக்கவும்
வங்கி ஓடிபி மற்றும் எஸ்.எம்.எஸ் களில் சந்தேகம் இருந்தால் உடனே வங்கியிடம் சொல்லுங்கள்
தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.



