நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிலத்திற்கு அடியில் அமைத்துள்ள குழாய்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. முறையான அனுமதியின்றி நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள் காரணமாக நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தரவு பெறும் அமைப்புமுறை, நிகழ்நேர கண்காணிப்பு நடவடிக்கைகள், தொடர் ரோந்து மூலம் பாதுகாப்பதற்கான பணிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவை கண்டறிவதற்கான அமைப்பு, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குழாய்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளை கண்டறியும் நடைமுறை பதிக்கப்பட்டுள்ள குழாய் குறித்த வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெட்ரோலியம் மற்றும் கனிமங்களுக்கான குழாய்கள் சட்டத்தின் கீழ், எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நிரந்தரமான கட்டடங்களை கட்டுதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தை மீறுவோர் மீது பயனாளர் உரிமைச் சட்டத்தின் கீழ் அபராதம் அல்லது சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி வழங்க ஏதுவாக குழாய்களை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான குழாய்களை அமைப்பது, அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது அதன் செயலாக்கம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கான அனுமதியை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் வழங்குகிறது.
நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மீது இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான பிரத்யேக குழாய்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், சுமார் 34,232 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைப்பதற்கான பணிகளுக்காக என்ஜிபிஎல் நிறுவனத்திற்கு இந்த வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 25,429 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக எரிவாயு விநியோக குழாய்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துளள்து.எஞ்சியுள்ள 10,459 கிலோ மீட்டர் நீளத்திற்கான குழாய்கள் அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.



