fbpx

ரயில்வே தட்கல் டிக்கெட் புக்கிங் அறிமுகம் செய்தவர் யார் தெரியுமா?… அட இந்த மாநில முதல்வரா?

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் 1951 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, பிகார் மாநிலம் பக்தியார்பூரில் கவிராஜ் ராம் லக்கன்சிங் மற்றும் பரமேஸ்வரி தேவி தம்பதிகளுக்கு ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றி வந்தார். பாட்னாவில் படித்து மெக்கானிக்கல் என்ஜினியர் பட்டம் பெற்ற நிதிஷ், அரசியலுக்கு வருவதற்கு முன் மாநில மின்சார வாரியத்தில் பணிபுரிந்தார்.

அரசியலில் நாட்டம் கொண்டிருந்த நிதிஷ்குமார் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, எஸ்.என்.சின்ஹா, கர்பூரி தாகுர் மற்றும் வி.பி.சிங் ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர்களை பின்பற்றி நடந்துவந்தார். 1974 முதல் 1977 வரை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் சேர்ந்து பிரசாரம் செய்தார். பின்னர் சத்யேந்திர சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

வாஜ்பாய் ஆட்சியின் போது சிறிது காலம் அவர் மத்தியில் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான் ரயில்வேயில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 2002 இல் தட்கல் டிக்கெட் புக்கிங் முறை அறிமுகமாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார்தான்.

2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிகார் முதல்வராக பதவியேற்றார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வினி யாதவ் (துணை முதல்வர்) மீது ஊழல் புகார்கள் எழுந்த்து. தேஜஸ்வினி பதவி விலக மறுக்கவே, நிதிஷ் குமார் பதவியை ராஜிநாமாச் செய்தார். இதையடுத்து மகாகூட்டணி உடைந்தது. பின்னர் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். பின்னர் 2022 இல் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 8-வது முறையாக பிகார் முதல்வரானார். இன்றுவரை அவர் முதல்வராக தொடர்கிறார்.

Kokila

Next Post

’நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவுடன் இணைந்து போட்டி’..!! ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு..!!

Wed Jan 3 , 2024
நாடாளுமன்ற தேர்தலில் அமமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் பிரதமரை சந்தித்தது தொடர்பாக விளக்கம் அளித்தார். ஓபிஎஸ் கூறுகையில், மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை சந்தித்தேன். பிரதமரை சந்தித்தபோது […]

You May Like