தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது.. தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதில் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4,500 பேர் பங்கேற்றுள்ளனர்..
இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தின் வாயிலில் இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. அனுமதி சீட்டு இருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், அனுமதி சீட்டு இல்லாதவர்களும் உள்ளே செல்ல முயன்றதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இதில் 3 பேர் காயமடைந்தனர்.. காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது..
இதனிடையே இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..2026 தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றபப்ட்டுள்ளது. நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து தீர்மானம், எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம், வட கிழக்கு பருவமழையின் போது மக்களை காக்க தவறவிட்டதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



