தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 1,100 உதவி அறுவை சிகிச்சையாளர் (Assistant Surgeon) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது. எனவே தகுதியான மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவுறுத்தியுள்ளது.
பதவியின் பெயர்: உதவி அறுவை சிகிச்சையாளர்
காலிப்பணியிடங்கள்: 1,100
எப்படி விண்ணப்பிப்பது?
படி 1: https://mrb.tn.gov.in/ என்ற MRB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: முகப்பு பக்கத்தில் உள்ள “Notification” பகுதியில் கிளிக் செய்யவும்.
படி 3: அங்கே காணப்படும் அறிவிப்பு எண் 17/2025-ஐ தேர்வு செய்து, அதில் உள்ள விண்ணப்ப லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
படி 4: திறக்கும் புதிய பக்கத்தில், புதிய விண்ணப்பதாரர்கள் “New Registration” மூலம் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே கணக்கு உள்ளவர்கள் Direct Login மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
படி 5: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
படி 6: கட்டணம் செலுத்தப்பட்டதும், விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து future reference-க்கு வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், 022 42706521 என்ற எண்ணிற்கு வேலை நாட்களில், வேலை நேரத்தில் தொடர்புகொள்ளலாம். மேலும் தகுதிகள் குறித்த தகவல்களுக்கு 044 24355757 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
தேர்வு எப்போது? தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவித்துள்ள உதவி அறுவை சிகிச்சையாளர் (Assistant Surgeon) பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு விவரங்கள்:
- உதவி அறுவை சிகிச்சையாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
- தேர்வுடன் தமிழ் மொழித் தகுதி தேர்வும் நடைபெறும்.
- எழுதப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- அரசு விதிப்படி இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படும்.
- தேர்வு தேதியை MRB விரைவில் அறிவிக்கவுள்ளது. விண்ணப்பித்தவர்கள் MRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
- தமிழ் மொழித் தகுதி தேர்வு
- 10-ம் வகுப்பு தரத்தில் கேள்விகள்
- 50 கேள்விகள்
- 1 மணி நேரம்
- தகுதி பெற எந்த பிரிவினரும் 40% மதிப்பெண்கள் கட்டாயம்
- இந்தத் தேர்வில் தகுதி பெற்றாலே முக்கிய எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும்.
உதவி அறுவை சிகிச்சையாளர் எழுத்துத் தேர்வு
- காலம்: 2 மணி நேரம்
- கேள்விகள்: 100 Objective Questions
- வினாத்தாள்: ஆங்கிலத்தில் மட்டும்
- Negative Marking இல்லை
- நேர்காணல் (Interview) இல்லை
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்
பொதுப்பிரிவு: 35 Marks
SC / SCA / ST பிரிவு: 30 Marks
சம்பளம்: மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வாகும் மருத்துவர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
Read more: இவர்களுக்கு எலுமிச்சை தண்ணீர் விஷத்திற்கு சமம்..! தவறுதலாக கூட அதை குடிக்காதீங்க..! இல்லனா..



