2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.. சமீபத்தில் புதுச்சேரில் தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று தவெக மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காகவும், வாக்குறுதிகளை உருவாக்கவும் 2 சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன..
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதொரு தமிழகத்தை உருவாக்க வேண்டும்.. அதற்காக விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு அவர் தலைமையை விரும்பி வருவோரை கூட்டணியில் அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, மக்களை காக்க தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்பு குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைக்கூவல் பொய்யுரைகளை தோலுரித்து எதிர்களை தோற்கடிக்க வலிமையான பரப்புரை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது..



