தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும்வகையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது..
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பெண்கள் பேசினர்.. கோவையை சேர்ந்த சரண் வித்யா என்ற பெண் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பேச முடியாத தனது மகள் தற்போது பேசுவது குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.. அப்போது “ என் மகளுக்கு 3 வயது இருக்கும் போது அவர் சரியாக பேசவில்லை என்பதால் மருத்துவரிடம் சென்றோம்.. மருத்துவ பரிசோதனையில் பாப்பாவுக்கு இரண்டு காதுகளுமே கேட்கவில்லை என்பது தெரிந்தது.. தனியார் மருத்துவமனையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்ய 17 லட்சம் செலவாகும் என்று கூறினார்..
ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று சொன்னார்கள்.. கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அறுவைசிகிச்சை செய்தாலும் 99% வாய்ப்பில்லை என்றாலும், பெண் குழந்தை என்பதால் விட முடியாது என்று அறுவை சிகிச்சை செய்தனர்.. பின்னர் ஓராண்டு ஆடிட் வெர்பல் தெரபியும் கொடுத்தனர்.. இன்று என் மகள் நன்றாக பேசுகிறார்… சாதாரண பள்ளியில் படிக்கிறார்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து சிறுமி கனிஷ்கா பாட்டு பாடி அசத்தினார்.. பேசவே முடியாத என்ற சிறுமி இன்று அனைவரின் முன்னிலையிலும் பாட்டு பாடி அசத்தினார்.. தொடர்ந்து பேசிய சிறுமியின் தாய், பேசவே முடியாத என் மகள் இவ்வளவு அழகாக பாடுகிறார்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இதை விட சந்தோஷமான தருணம் இருக்க முடியாது. என்று நெகிழ்ச்சியாக பேசினார்..



