ஸ்பெயினில் ஒரு விசித்திரமான காரணத்துக்காக ஒரு பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தினமும் அலுவலக நேரத்திற்கு 40 நிமிடங்கள் முன்பாக அவர் வந்தது தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் நிறுவனத்தையும் நீதிமன்றத்தையும் ஆதரிக்க, சிலர் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்..
பெண் ஊழியர் ஏன் நீக்கம் செய்யப்பட்டார்?
அந்த ஸ்பானிஷ் நிறுவனத்தின் விதிப்படி, அந்த ஊழியரின் அலுவலகச் சேரும் நேரம் காலை 7:30. எனினும், அந்த பெண் ஊழியர், கடந்த 2 ஆண்டுகளாக தினமும் 40 நிமிடங்கள் முன்பே அலுவலகத்துக்கு வந்துள்ளார். நிறுவனம் பலமுறை வாய்வழியாகவும், எழுதித்தரவும் எச்சரித்தாலும், அந்த அதைப்பின்பற்றவில்லை.
அந்த பெண் முன்னதாகவே வருவதால் அவருக்கு செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லை.. அது குழுவின் உள்ளக பணிச்சரக்கை (internal coordination) பாதித்தது.. இவற்றை காரணமாகக் குறிப்பிட்டு, இறுதியாக மேலாளர் அப்பெண்ணை பணிநீக்கம் செய்தார்.
நீதிமன்ற தீர்ப்பு
அந்த பெண் ஊழியர், தனது பணிநீக்கத்தை எதிர்த்து அங்குள்ள சமூக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது அலுவலக தரப்பு அலுவலக நேரத்தை பின்பற்றுமாறு அவளுக்கு பலமுறை எழுதித் தரப்பட்ட மற்றும் வாய்வழி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன என்று தெரிவித்தது.. மேலும் “ அலுவலக நேரத்திற்கு முன்பாக வருவதால் செய்ய வேலை எதுவும் இல்லாமல் இருந்தது, இதனால் நிறுவன செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன, மேலும், அலுவலகத்திற்கு வரும் முன்பே, அவள் 19 முறை நிறுவனர் பயன்பாட்டில் (company app) உள்நுழைய முயற்சித்திருக்கிறார்.. இந்த நடத்தை நிறுவன விதிகளை பின்பற்ற மறுப்பதாகவும், “விசுவாசமின்மை” எனவும் வாதிடப்பட்டது. நீதிமன்றம், இந்தப் பெண்ணின் செயல்கள் ஸ்பானிஷ் சட்டங்களை நேரடியாக மீறுவதாகவும் கூறியது.
நெட்டிசன்கள் எதிர்வினை
சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் பரவிய நிலையில் சிலர் பெண்ணுக்கு ஆதரவாகவும், சிலர் நிறுவனத்திற்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. நிறுவனத்தை ஆதரிப்பவர்கள், அலுவலக கலாசாரம் தெளிவாக இருக்க வேண்டும், அனைவரும் சமமாக விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
பெண்ணை ஆதரிப்பவர்கள் “முன்னதாக வருவது எப்படி பிரச்சனை ஆகும்?” “இது தண்டனைக்கு உரிய குற்றமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர்..
Read More : இனி AI ராஜ்ஜியம் தான்.. 2026 இவ்வளவு மோசமாக இருக்குமா..? பாபா வாங்காவின் பயமுறுத்தும் கணிப்பு..!



