Flash : முன்னாள் சி. விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு.. சபாநாயகர் அறிவிப்பு..!

vijay bhaskar

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.. மக்கள், கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்..


எனினும் விஜயபாஸ்கர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.. ஆனால் அவர் எப்போது திமுகவில் இணைவார் என்பது தெரியவில்லை.. தனது அரசியல் நிலைப்பாட்டை விஜய பாஸ்கர் இன்னும் அறிவிக்கவில்லை..

இந்த நிலையில் சி. விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் நின்று வெற்றி சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.. இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்..

அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.. விஜயபாஸ்கர் அளித்த பதவி விலகல் கடிதம் பேரவை விதி 22-ன் படி முறையாக உள்ளதால் அதனை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்..

RUPA

Next Post

ரூ. 15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்.. 15,058 மின் பணியாளர்கள் நியமிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு..!

Tue Jun 16 , 2026
தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு […]
cm vijay speech

You May Like