“நம்ம தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. ஆணுறை வேண்டாம்”..!! இன்ஸ்டாவால் பறிபோன சிறுமியின் உயிர்..!! போதையில் காதலனுடன் செய்த லீலைகள்..!!

insta love

கனவுகளுடன் வாழ்ந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கை, இன்ஸ்டாகிராம் புகழ் மற்றும் ஒரு போதைக்கு அடிமையான காதலனால் நொடியில் நாசமான கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வந்த ஆஷா பட்டேல், தனது அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்திற்கு காரணமான 4 மருத்துவ மாணவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, தந்தையை இழந்து, தாயார் கீதா பட்டேலுடன் வசித்து வந்தார். தாயின் சிற்றுண்டிக் கடைதான் அவர்களின் ஒரே வாழ்வாதாரம். பள்ளிப் படிப்பை முடித்த ஆஷாவை ஆன்லைனில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, தாய் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்தார். அதுதான் ஆஷாவின் வாழ்க்கையை மாற்றியது.

ஆரம்பத்தில் படிப்புக்காக பயன்படுத்தப்பட்ட அந்தப் போன், பிறகு முழுவதும் இன்ஸ்டாகிராமில் நடன வீடியோக்கள் மற்றும் பயணங்களை வெளியிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது. குறுகிய காலத்திலேயே ஆஷாவுக்கு லட்சக்கணக்கான ஃபாலோவர்கள் கிடைத்து, ஒரு நடிகை கூட அவரைப் பின் தொடரும் அளவிற்குப் பிரபலம் ஆனார்.

ஆஷாவுக்குள் இருந்த ஒரு குறை “பெரிய இன்ஃப்ளுன்சர்கள் போல வசதியாக வாழ வேண்டும்” என்ற ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றுவதாகக் கூறி வலையில் வீழ்த்தியவன்தான், மும்பையில் இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் ஹர்ஷத் மேத்தா. ஹர்ஷத்தின் விலையுயர்ந்த கார், ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் கண்டு ஆஷா முழுமையாக அவர் மீது காதல் வயப்பட்டார். இருவரும் வெளியூர் பயணம் மேற்கொள்வது, போதைப்பொருள் பார்ட்டிகளில் கலந்துகொள்வது என தொடர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆஷாவும் போதைக்கு அடிமையானார்.

“என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறாய், அதனால் ஆணுறை வேண்டாம்” என்று ஆஷா பேசிய அந்தரங்க குரல், ஹர்ஷத்தின் போனில் வீடியோவாகப் பதிவாகியிருந்தது. “உன் மகளை ஒரு மருத்துவரின் மனைவியாகப் பார்க்கப் போகிறாய்” என்று தாயிடம் ஆஷா பெருமையாக அறிமுகப்படுத்திய போதும், ஹர்ஷத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆஷாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான்.

2023-ஆம் ஆண்டு திடீரென ஆஷாவின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. 5 நிமிட நீளமுள்ள அந்த வீடியோ துண்டுகள் எடிட் செய்யப்பட்டு, ஆபாச தளங்களில் வைரலாகப் பரவின. “யாரோ ஹேக் செய்திருப்பார்கள்” என்று கூறி ஹர்ஷத் மழுப்பிய நிலையில், உண்மையில் அவன் அந்த வீடியோக்களைத் தன் நண்பர்களிடம் கொடுத்திருந்தான்.

அந்த நண்பர்கள் விளையாட்டாக வெளியிட்ட வீடியோ துண்டுதான் ஆஷாவின் உயிரையே பறித்தது. வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆஷா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தனது ஒரே மகள் தனியாகத் தூக்கில் தொங்கியதைக் கண்ட தாய் கீதா பட்டேல் மயங்கி விழுந்தார்.

போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஹர்ஷத் மேத்தாவும் அவனது 3 நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். “பணம் பறிக்க நினைத்தோம், விளையாட்டாகத்தான் வீடியோவை வெளியிட்டோம்” என்று நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், அந்த விளையாட்டு ஒரு உயிரையே பறித்துவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், ஆஷாவின் வாழ்க்கையை நாசம் செய்து, அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த 4 மருத்துவ மாணவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்துள்ளது.

Read More : இளம் வயதில் எந்த அறிகுறியும் இல்லாமல் திடீர் மரணங்கள்..!! என்ன காரணம்..? யாரை அதிகம் தாக்கும்..? ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்

CHELLA

Next Post

Flash : தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து..!

Mon Dec 15 , 2025
The order to detain Gnanasekharan under the Goondas Act in the Anna University student sexual assault case has been quashed.
anna university rape case 11zon

You May Like