தேவகோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு தவெக கொடி கட்டப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் சத்தமாக கத்தியபடி வந்ததாகவும், அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மீது கார் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, டூவீலரின் உரிமையாளர் காரில் இருந்தவர்களிடம், “பார்த்து செல்லலாமே? ஏன் வண்டி மீது மோதினீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், காரில் இருந்த சிலர் ஆத்திரமடைந்து அந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கியுள்ளனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் ஓட முயன்றபோதும், விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் நிலைதடுமாறி கீழே விழுந்த பின்னரும் தாக்குதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பேருந்து நிலையம் அருகே இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் ஒடினர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே காவல் உதவி மையம் செயல்பட்டு வந்த நிலையில், அங்கு இருந்த போலீசார் உடனடியாக தலையிட்டு தாக்குதலை தடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தேவகோட்டை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: ‘ரோமுக்கு நல்வரவு, என் நண்பரே!’: பிரதமர் மோடியின் இத்தாலி பயணம்.. செல்ஃபி எடுத்த ஜார்ஜியா மெலோனி..!



