2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது..
தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.. சமீபத்தில் புதுச்சேரில் தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்திற்கு 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி, சாலையில் இருந்து 250 அடி தூரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகளை அமைக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.. பிரச்சார வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து தெளிவான வரைபடத்தை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நிகழ்ச்ச்சி வரும் பொதுமக்கள், மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-இலும் குடிநீர் வசதி செய்து தரப்படும் வேண்டும்.. அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர வழிவிடப்பட வேண்டும்.. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் வெகு நேரத்திற்கு முன்பு வருவதை தவிர்க்க வேண்டும்..
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவரக்ள் வருவதை தவிர்க்க ஊடக மூலமாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.. மின்கம்பம், மரங்கள் உயரமான கட்டிடங்கள், விளம்பர பதாகைகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்க கூடாது. நிகழ்ச்சியின் போது பொதுமக்கள், கட்சி தொண்டர்களை ஒவ்வொரு BOX-லும் 80% மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்..
நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் போதும், வெளியேற்றப்படும் போதும், பொதுமக்கள், கட்சி, தொண்டர்களை தள்ளுமுள்ளு இல்லாமல் இடைவெளி விட்டு வரிசையாக அனுப்ப வேண்டும்.. எவ்வளவு சிசிடிவி கேமரக்கள், எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளது என்ற விவரத்தை வழங்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன..
Read More : Breaking : ஷாக்..! ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சம்..!



